Thursday, April 26, 2012

343 பாலுஜியின் தொகுப்பு >> ராகினி பாஸ்கரன்



ஜெர்மனி வானொலி அறிவிப்பாளினி திருமதி. ராகினி பாஸ்கரன்.


அறிவிப்பாளினி திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களின் இனிய குரலில் பல தொகுப்புகள் இந்த தளத்தில் வந்திருந்தாலும் சமீபத்தில் எனக்கு அனுப்பிய இந்த இரண்டு ஒலித்தொகுப்புகளூம் வழக்கம் போல் மிகவும் இனிமையாக இருந்தன. பாலுஜியின் பாடல்கள் நாம் பலதடவை கேட்டு ரசித்திருந்தாலும் சிறப்பான பாடல்கள் ஒலித்தொகுப்பாக கேட்கும் என்றும் இனிமை மாறுவதில்லை என்பதே உன்மை.  நான் ரசித்த இந்த தொகுப்புகளை உங்கள் செவிகளுக்கும் வழங்குகிறேன் உங்கள் உன்னதமான கருத்துகளை எழுதுங்கள்.

அறிவிப்பாளினி இரண்டு மாதம் முன் சென்னை விஜயம் செய்த போது அவரை சந்திக்க முயற்சி செய்து முடியாமல் போனது வருத்தமாக இருந்தாலும் இந்த ஒலித்தொகுப்பு மூலம் அவரின் குரலை மீண்டும் ரசிக்க வைத்தமைக்கு அவருக்கு நன்றி.


ஜெர்மன் தமிழ் வானொலியில் எஸ்.பி.பி ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம் பகுதி 1


ஜெர்மன் தமிழ் வானொலியில் எஸ்.பி.பி பாடல்கள் ஒலித்தொகுப்பு பகுதி 2

3 comments:

கணேஷ் said...

தங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் வந்து பார்த்துக் கருத்திட்டால் மகிழ்வேன். நன்றி!

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_05.html

Covai Ravee said...

அன்பரே.. என் பள்ளி பருவத்தை நீனைவுபடுத்தி விட்டீர்கள். நீங்கள் பதிவில் பிரபலமான கதாபாத்திரங்கள் அப்பு சீதா பாட்டியின் அபிமான ரசிகன் அவர்கள் அடிக்கும் லூட்டிகளை வெகுவாக படித்து ரசித்திருக்கேன். பதிவுலகில் வந்தவுடன் படிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மேலும், எனது பதிவுகளான பா.நி.பா, மற்றும் பாசப்பறவைகள் தங்கள் பதிவில் இணைத்து அனைத்து சீனியர் பதிவர்களின் பார்வைக்கு வைத்தமைக்கும் என் மனமார்ந்த நன்றி. அத்துடன் புன்னகை பூக்கட்டும் என்ற தளத்தின் தொடர்பு பாசப்பறவைகள் தளத்தில் தந்துள்ளேன் அன்பர்கள் அதிலும் சென்று நகைச்சுவையுடன் இனிய பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மிக்க நன்றி கனேஷ் சார்.

Covai Ravee said...

ராகினி மேடத்தின் இனிய குரலில் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பதிவு.

Follow by Email