Tuesday, September 11, 2012

351 கூடு எங்கே தேடி கிளி ரெண்டு


இந்த மாதம் செப்டம்பர் ஒன்றாம் தேதி திருச்சியில் பாலுஜி அவர்கள் எஸ்.பி.பி 1980 என்ற எஸ்.பி.பி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் சார்பில் முதல் நிதி சேர்க்கும் இசை நிகழ்ச்சியில் பாடிய போது எடுத்த படம். படம் உதவி -- நன்றி. யாகூ எஸ்.பி.பி ரசிகர் குழு.



கேட்டதெல்லல்லாம் நான் தருவேன் என்று ஐரோப்பிய தமிழ் வானொலியின் அறிவிப்பாளினி கலக்கல் கவிதைக்குயில் திருமதி ராகினி பாஸ்கரன் அவர்கள் தன் கொஞ்சும் குரலில் பாலுஜியின் பாடல்களை  தொகுத்து வழங்குகிறார்  நமக்காக. தேன் குரல் மழையில் எவ்வளவு தடவை நனைந்தாலும்  ஓர் உற்சாகம் தான் அந்த உற்சாகத்தை இந்த ஒலித்தொகுப்பில் நாம் அறியலாம் அன்பர்களே. கேட்டு மகிழுங்கள்.



ஐரோப்பிய வானிலி அறிவிப்பாளினி திருமதி. ராகினி பாஸ்கரன்.

பாசப்பறவைகள்
உடுக்கையின் ஓசையில் உலகம் தோண்றியது
இந்த பாசத்தின் ஓசையில் இந்த களம் தோண்றியது

உலகில் பறந்து திரியும் இசைப்பறவைகள் எல்லாம்
ஒருமரத்து பறவைகளாக இங்கே பாசப்பறவைகள் ஆகின:

தண்ணீர் தாகம் தீர்க குளத்தை நாடிபறக்கும்
பறவைகள் போல்
இசை தாகத்தை தீர்க பறவைகள் யாவும்
இந்த பாசப்பறவைகளை நாடி ஒடி வருகின்றன.

முகம் பாராத பறவைகாளாய்
இசை தாகத்தை தீர்த்து 
பறந்து செல்லும் போது 
இந்த  களம்    தேனாக தித்திக்கும் சுவையாக
சுவைக்கின்றது!

பறவைகளில் ஒருத்தியாக
etr வானொலி அறிவிப்பாளர்
ராகினி பாஸ்கரன்
ஜேர்மன்



1.தென்றலுக்கு இன்றொரு வயது
2.அங்கம் புதுவித அழகினில்
3.ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
4.இளமை எனும் பூங்காற்று
5.கல்யாண கோயிலின் தெய்வக்கலசம்
6.மன்மத லீலை மயக்குது







7.மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
8.மேகமே தூதாகவா தென்றலே
9.கீதா.. கீதா...கீதா
10.கேட்டதெல்லாம் நான் தருவேன்
11.நினைத்தால் நான் வானம் சென்று
12.கூடு எங்கே தேடி கிளி ரெண்டு

பாசப்பறவைகள் தளத்திற்க்காக அழகான வாழ்த்துக் கவிதையை அனுப்பிய கொஞ்சும் குரல் யாளினி  திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் அன்பர்களே.

ஒன்று முதல் ஆறு வரையிலான பாடல் ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே.

ஏழு முதல் பன்னிரண்டு வரையிலான பாடல் ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே.

No comments:

Follow by Email