Wednesday, September 19, 2012

353 தஙகநிலவே நீ இல்லாமல்



நீண்ட நாட்கள் கழித்து ஒற்றுமையை கண்டு பிடிக்கும் பாடல் தொகுப்பு இந்த தளத்தில்  முன்னாள் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா மிகவும் ஸ்வாரசியமாக தொகுத்து வழங்குவார்.  தற்போது அதிகம் வானொலியில் வருவதில்லை.  சமீபத்தில் வானவில் பண்பலையில் இந்த நிகழ்ச்சி கேட்க முடிந்தது.  இதை வழங்கியவர் எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.ரவி அவர்கள்  இவரின் தொகுப்புகள் ஏற்கெனவே இந்த தளத்தில் வந்துள்ளது.  இவர் வழங்கும் ஒலித்தொகுப்பில் என்னவொரு சிறப்பு என்றால் யாரும் அதிகம் கேட்டிராத பாடல்களை மெனகெட்டு தேடி பிடித்து வழங்குவார் அதற்க்காக இவரின் நிகழ்ச்சியை விரும்பி கேட்பேன் அதே போல் குறுஞ்செய்தி  நிக்ழ்ச்சிகளும் அபாரம்  கேட்பவர்கள்  தலை முடியிருப்பவர்கள் நிச்சயம் பிய்த்துக்கொள்ளாத குறைதான்.  ஆனால் கேட்கும்  நேயர்கள் அசகாய சூரர்கள் எவறாவது ஒருத்தர் தேடி பிடித்து பேர் வாங்கி கொண்டுவிடுவார்.  

சரி விசயத்துக்கு வருகிறேன். இந்த ஒலித்தொகுப்பிலும் ஒரு ஒற்றுமையை புகுத்தி கேட்பவர்கள்  ஆர்வத்தை தூண்டியுள்ளார்  இதே போன்று நிகழ்ச்சிகளை  அவர்  அதிகம் தர வேண்டும் என்று இணையதள நேயர்கள் சார்பாக கேட்டுகொள்கிறேன்.  சிரமபட்டு ஒலித்தொகுபபை மிகவும் ஸ்வாரசியமாக வழங்கிய அறிவிப்பாளர் திரு.ரவி அவர்களூக்கும்.  இந்த ஒலித்தொகுப்பில் சரியான விடை கண்டுபிடித்த தீபிகா வர்ஷினி, தெலுங்கு வீதி அவர்களூக்கும்  வாழ்த்துக்கள்.

குறிப்பு: விடை கடைசியில் தான் சொல்லுவார் ஆகவே நீங்களூம் முயற்சிக்கலாமே?  அப்படியே உங்கள் கருத்துக்களையும்  தாருங்கள்.






1.தாஜா பன்னி நான் தான் - டாக்டர் சிவா
2.உன்னைத்தான் நான் அறிவேன் - வாழ்க்கைப் படகு
3.தொட்டுப்பாருங்கள் ஜோடி பூவை - குழந்தைக்காக
4.ராதையின் நெஞ்சமே-கன்னிமுத்துப்பாபா
5.அந்த நாள் முதல்-பாவமன்னிப்பு
6.விழியே விழியே -புதியபூமி
7.பிருந்தவனமும் நந்தகுமாரும்-மிஸ்ஸியம்மா
8.மழை கூட ஒரு நாளில்-மாலையிட்ட மங்கை
9.காதல் எனும் ஆற்றினிலே-கைராசி
10.தஙகநிலவே நீ இல்லாமல்-சிநேகதி
11.கண்ணும் கண்ணும் பேசுது-திருடாதே
12.பேரின்பமே வாழ்விலே-தேவகி
13.எங்க விட்டு ராணிக்கு இப்போ-கிருஹப்பிரவேசம்

பாடல் ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே அழுத்தவும்

No comments:

Follow by Email