Wednesday, September 26, 2012

355 ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு




வணக்கம் அன்பர்களே இது நேற்றைய வானொலி நிகழ்ச்சி  வழக்கம் போலவே எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.ரவி அவர்கள் ஒற்றுமை கண்டு பிடிக்கும் நிகழ்ச்சி ஒலித்தொகுப்பாக வழங்கினார். அயராது  வானொலி கேட்கும் நேயர்களாலே எளிதில் கண்டு பிடிக்க முடியாத ஒற்றுமை கேள்விகளுடன் தான் இவர் தருவார் பிரபல பாடல்களிலே பதிலை கண்டு பிடிப்பதற்க்குள் போதும் போதும் என்றாகி விடும் அதுவும் இவர் வழங்கும் அறிதான பாடல்களிலே ஒற்றுமை பார்பதென்றால் கஷ்டம் கொஞ்சம் கஷ்டம் தான். எப்படி கொடுத்தாலும் வானொலி நேயர்கள் அசகாய சூரர்கள் முடிவில் பதிலை சொல்லிவிடுவார்கள்.  என்னைபோன்ற கத்துக்குட்டிகளூக்கு புரிய வேண்டுமென்றால் பேச்சின் நடுவே க்ளூ என்ற பெயரில் சாகச வார்த்தைகள அவர் சொல்ல் வேண்டும் (அறிவிப்பாளர் ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா நிகழ்ச்சிகள் இதே தளத்தில் உள்ளன அவரின் தொகுப்பு நல்ல ஸ்வாரசியமாக இருக்கும் க்ளு நிறைய தருவார் அப்படியே நாங்க தினறுவோம்) அப்போது இன்னும் ஸ்வாரசியமாக நிறைய பேர் சொல்ல முயற்சி செய்வார்கள்.  பழைய பாடல்களை என்று கேட்டாலும் மயிலிறகால் மனதை வருடும் போல் இருக்கும். ஆமாம் அன்பர்களே இந்த ஒலித்தொகுப்பும் மயிலிறகு என்ற தலைப்பில் ஒலிபரப்பானவை.  இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.ரவி அவர்களூக்கு வாழ்த்துக்களூம் நன்றிகளூம்.


இணையதள நேயர்களே  பொழுது போகலைன்னா நீங்களூம் யோசிக்கலாமே?
முடியலைன்னாலும் பின்னூட்டம் இருக்கே இருக்கு..

மேலும் சரியான பதிலை சொன்ன நேயர்கள் திருப்பூர், பி.ஆர்.மோகனசுந்தரம் (Facebook famouse prm mohanasundarm),தண்ணீர்பந்தல் திருப்பூர் அகிலா விஜயகுமார், கோவை பூக்கடை மணி, வேலுமணி,மதுரைநாகமணி,மற்றும் மணி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.







1.அதிசயம் பார்த்தேன் மண்ணிலே - கலையரசி
2.வெள்ளிமலை பொதிகைமலை -கந்தன் கருணை
3.மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-அனுபவி ராஜா அனுபவி
4.ந்மது அரசு நமது நாடு-பணக்காரபிள்ளை
5.ராஜயோகமே பாரீர்-வணங்காமுடி
6.தனிமையிலே இனிமை காணமுடியுமா-ஆடிப்பெருக்கு
7.ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்-பாழும் பழமும்
8.அக்கா உன் மகளை பார்த்தாயா-கவிதா
9.ஆடைக்கட்டி வந்த நிலவோ-அமுதவல்லி
10.உன்னை காணாத கண்ணும்-இதயமகலம்
11.நான் ஒரு முட்டாளுங்க-சகோதரி
12.ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு-காவியத்தலைவி
13.கங்கை கரைத்தோட்டம்-வானம்பாடி


ஒலித்தொகுப்பை பதிவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்தவும்

No comments:

Follow by Email