Saturday, February 25, 2012

338 இசையரசியுடன் இன்னிசைப் பாடகர்கள்


இசையரசியுடன் இன்னிசைப் பாடகர்கள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையரசி பி.சுசீலா அவர்களுடன் இன்னிசைப்பாடகர்கள் இணைந்து பாடிய பிரபல பாடல்கள் வானொலியில் கேட்க மிகவும் இனிமையாகவும் மனதுக்கு இதமாகவும் இருந்தது. எனது
இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.ரவி அவர்கள் எப்போது நிகழ்ச்சி வழங்கினாலும் வானொலியில் அதிகம் ஒலிபரப்படாத பாடல்களை தான் தேடிப் பிடித்து வழங்குவார் அந்த வகையில் நான் ரசித்த இந்த ஒலித்தொகுப்பிலும் அறிதான பாடல்கள் வழங்கினார். இதோ உங்கள் செவிக்கும்.

1. சொட்டு சொட்டு சொட்டுன்னு - அடவந்த தெய்வம் - டி.ஆர்.மகாலிங்கம்
2. புத்தம் புது மேனி -சுபதினம் - பாலமுரளி கிருஷ்னா
3. முடியாது சொல்ல முடியாது - கண்டசாலா - மஞ்சள் மகிமை
4. ஏ குட்டி என் நேசம்-நாகேஸ்வரராவ் - குடும்பம்
5. காவியமா நெஞ்சில் ஓவியமா -ஜெயராமன் - மஞ்சள் மகிமை
6. காதல் என்றால் ஆணும் - ஏ.எல்.ராகவன் - பாக்யலக்‌ஷ்மி
7. வாம்மா வாம்மா சின்னம்மா - சீர்காழி கோவிந்தராஜன் - தாயில்லா பிள்ளை
8. ஆனந்தஇல்லம் நான் கண்ட உள்ளம் - ஏ.எம்.ராஜா - இது இவர்களின் கதை
9. அனுபவம் புதுமை - பி.பி.ஸ்ரீனிவாஸ் - காதலிக்க நேரமில்லை
10. லவ் லவ் எத்தனை கனவு - டி.எம்.சௌந்தரராஜன் - அதே கண்கள்
11. மாதமோ ஆவணி - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - உத்தரவின்றி உள்ளே வா
12. விழியே கதை எழுது - கே.ஜே.யேசுதாஸ் - உரிமைக்குரல்


இசையரசியுடன் இன்னிசைப் பாடகர்கள் ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம்.

Tuesday, February 21, 2012

337 யவ்வனமே என் யவ்வனமேபிரபல கர்நாடக மற்றும் திரையிசை பின்னணிப் பாடகி ஏ.பி.கோமளா அவர்களின் இனிமையான பாடல்களுடன் அடங்கிய ஒலித்தொகுப்பு இன்று நீங்கள் கேட்கப்போவது. அவரைப்பற்றிய ஸ்வாரசியமான தகவல்களுடன் நமக்கு வழக்கம் போல் தன் பாணியில் பகிர்ந்து கொள்பவர் அறிவிப்பாளினி திருமதி. ஸ்ரீவித்யா வரதராஜன். இந்த ஒலித்தொகுப்பு பதியும் போது தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் மின்வெட்டின் போது என் அலைபேசியில் பதிவு செய்யப்பட்டதால் ஒலித்தொகுப்பு மிகவும் சுமாராக இருக்கும் கொஞ்சம் சகித்துக்கொண்டு கேட்டு ரசியுங்கள் இது போன்று ஒலித்தொகுப்புக்கள் கேட்பது மிகவும் அபூர்வம். பாடல்களை தகவல்களூடன் கேட்டு உங்கள் உன்னதமான உணர்வுகளை தாருங்கள் அன்பர்களே.


1.குயிலோசையை வெல்லும்
2.கல்யாணமே செய் கல்யாணமே
3.யவ்வனமே என் யவ்வனமே
4.விளையாடு ராசா விளையாடு
5.வானிலே மலர்ந்திடும் வளர்மதியே
6.சுந்தரி சவுந்தரி
7.பறக்குது பார் பொய் பறக்குது பார்
8.வான்மரங்கள் கனி கொடுத்து
9.பொட்டுகட்டி தாலிகட்டி
10.மாத பிதா குரு தெய்வம்
11.டக் டக்குன்னு அடிக்கடி துடிக்கும்
12.நிலவோடு வான் முகில்


யவ்வனமே என் யவ்வனமே ஏ.பி.கோமளா ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம்

Monday, February 13, 2012

336 நினைத்தால் போதும் பாடுவேன்நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ். ஜானகிஅம்மா அவர்களின் ஒலித்தொகுப்பு தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி ஸ்ரீவித்யா வரதராஜன். ஜானகியம்மாவின் இனிய பாடல் மற்றும் அவரை பற்றிய தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள். அவர் உடல் நிலையில் இருந்து நல்லபடியாக ஆரோக்கியத்துடன் சரியாகி மீண்டும் பாடி நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

1.அழகிய தேவதை வானத்தில்
2.என்னை ந முதலாக் பார்த்த போது
3.பொதிகைமலை உச்சியிலே புறப்படும்
4.மனலோசனி மனமுனு
5.காலையும் நீயே மாலையும் நீயே
6.சொல்லாமல் தெரியவேண்டுமே
7.பொன் என்பேன் சிறு பூ என்பேன்
8.தூக்கமும் கண்களை தழுவட்டுமே
9.நினைத்தால் போதும் பாடுவேன்
10.அங்கே வருவது யாரோ
11.ஒரு பொன்னை பேசச்சொன்னால்

ஜானகியம்மாவின் பாடல் தொகுப்பு கேட்கலாம்

Tuesday, February 7, 2012

335 சித்தூர் வி.நாகைய்யா

Photobucket

Photobucketஎவ்வளவோ சினிமா பிரபலங்கள் பற்றி தெரியாதவர்கள் பலர் இருக்கின்றனர். பிரபல குணசித்திர நடிகர் திரு.சித்தூர்.வி.நாகைய்யா அவர்களைப் பற்றி சினிமா தொடர்பு உள்ளவர்கள் மட்டும் அறிந்திருக்கவாய்ப்பு இருக்கும். இணையத்தில் இவரைப்பற்றி அறிதான தகவல்கள் பல இருந்தாலும் இணையத்தில் சென்று பார்த்து படிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைப்பது அறிது. ஏனென்றால் அவரவர் வேலை பளுவின் காரணமாக சென்று படிக்க முடிவதில்லை. அந்த வகையில் சித்தூர் வி.நாகைய்யா அவர்களின் தகவல்களூடன் அவர் நடித்த
படங்களின் பாடல்களூடன் கேட்க வாய்ப்பு கிடைத்தால் நாம் விட்டு விடுவோமா? இதோ இந்த பதிவில் பாடல் பட்டியல் பாருங்கள் அதிகபட்ச பாடல்கள் நாம் பல தடவை இந்த தளத்தில் கேட்டிருந்தாலும் அவருடைய
தகவல்களூடன் கேட்க ஒரு இனிமை தான். அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீ வித்யா வரதராஜன் அவர்கள் வழக்க்ம் போல் மிகவும் அழகாக அவருக்கே உரித்த பாணியில் தொகுத்து வழங்கியிருக்கிறார். பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள் அத்துடன் உங்கள் மனதில் தோன்றிய கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே.

1.எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவது
2.கண்ணா மறையாதேடா
3.பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே
4.நம்பினார் கெடுவதில்லை
5.மோஹன புன்னகை பேசிடும்
6.ஆண்கள் மனமே இப்படித்தான்
7.தெய்வ மலரோடு வைத்த மனம்
8.பார்த்து பார்த்து நின்றதிலே
9.காத்திருந்த கண்களே
10.நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
11.சிங்கார கண்ணே உன் தேனூறும்


சித்தூர் நாகைய்யா அவர்களின் த்கவல்களூடன் அவர் நடித்த பாடல் தொகுப்பு இங்கே.

334 ராஜ பார்வையில் ராஜ கீதங்கள்

Photobucket

ராஜ பார்வையில் ராஜ் கீதங்கள் இந்த வித்தியாசமான ஒலித்தொகுப்பின் ஸ்கிரிப்டை 2 வருடத்திற்க்கு முன் வானொலி நிலையத்திற்கு அனுப்பிவைத்து திடிரென்று சென்ற வாரம் ஞாயிறு அன்று மாலை ஒலிபரப்பினார்கள் இந்த ஆக்கத்தை உருவாக்கியவர் என்னிடம் சொல்லும் போது அடடே பரவாயில்லையே வானொலி நிலையத்தார் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்களே என்று யோசித்தேன். நல்ல தொகுப்பின் எழுத்துக்களுக்கு தற்போதாவதே மரியாதை கிடைத்ததே என்று சந்தோசப்பட்டேன். ஆக்கத்தை உருவாக்கிய திரு. சோமந்துறை சித்தூர் சிவக்குமார் என்னிடம் தெரிவித்த போது மிகவும் ஆச்சரியப்பட்டேன் அப்போது மேலே எழுதிய எழுத்துக்கள் தான் என் மனதில் ஓடியது. இந்த ஒலித்தொகுப்பை வானொலி அறிவிப்பாளர் திரு கதிர் மிகவும் அழகாக தொகுத்து வழங்கினார் அவருக்கும் ஆக்கத்தை உருவாக்கியவருக்கும் இணையதள நேயர்கள் சார்பாக பாராட்டுக்களூம் நன்றிகளூம். கேட்டுமகிழுங்கள் உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் அன்பர்களே.

1.ஏடு தந்தானடி தில்லையிலே
2.ராஜா சின்ன ரோஜாவோடு
3.நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்
4.ராசத்தி உன்னை காணாத நெஞ்சு
5.மீன்கொடி தேரில் மன்மத ராஜன்
6.ஹே ராஜா ஒன்றானொம் இன்று
7.ராஜாவுக்கு ராஜா நான் தான்


ராஜ பார்வையில் ராஜ கீதங்கள் - சோமந்துறை சித்தூர் சிவக்குமார் அவர்களின் ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம்

Friday, February 3, 2012

333 கண்ணில் வந்து மின்னல் போல்
வானொலியில் எப்போது கேட்டாலும் பொதுவாகவே அறிவிபாளர்கள் புது உற்சாகத்துடன் நிகழ்ச்சியில் பாடல்களை தருவார்கள் மயிலிறகு இரவு நிகழ்ச்சியில் வழக்கம் போல் பேசுவதை விட ஒரு கட்டை சுதி குறைத்து தொகுத்து வழங்குகிறார்கள். அது போல பல அறிவிப்பாளர்களில் இந்த நிகழ்ச்சியில் வரும் திரு. சந்திப் அவர்களூம் சுதி குறைத்து அமைதியாக பேசினது ஆசசரியத்தை தந்தது. மயிலிறகு என்ற பழைய பாடல் நிகழ்ச்சிகள் என்பதாலோ என்னவோ கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்களோ? எப்படி இருந்தாலும் பழைய பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் தெவிக்காத தேன் சொட்டுக்கள் தான். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.


1.ஆனந்தம் இன்றே ஆரம்பம்
2.மதன மாளிகை மந்திர மாலைகளா
3.காதலின் பொன் வீதியில்
4.உலாவும் இன்ப நாதம்
5.எந்தன் உள்ளம் துள்ளிவிளையாடுவதும்
6.இந்த மன்றத்தில் ஓடி வரும்
7.அன்று ஊமைப்பெண்ணல்லலோ
8.அத்தைமகனே போய்வரவா
9.அம்மாவும் நீயே அப்பாவும்
10.கண்ணில் வந்து மின்னல் போல்
11.என்னை ஆளூம் பிரேமையோ
12.இன்பம் பொங்க்கும் வென்னிலா

அறிவிப்பாளர் திரு.சந்தீப் வழங்கிய அழகிய மயிலிறகு ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம்.

332 உண்டியல் - குறும்படம்


சென்னை மேயரிடம் இருந்து உண்டியல் குறும்படம்  இரண்டாம் பரிசு  பெறுபவர்  இயக்குன்ர் திரு.விடிவெள்ளி, ஸ்வரன் கிஷோர், மற்றும் நடிகர்கள். படத்தில் சென்னை அண்ணா யுனிவர்ஸ்டி டீன்  திரு.சேகர்.


உண்டியல் - குறும்படம்
இயக்குனர்: விடிவெள்ளி
இசை:ஸ்வரன் கிஷோர் (ஆர்.கிஷோர் குமார்)

சென்னையில் மல்டிமீடியா படிக்கும் மாணவர்களின் உழைப்பில் உருவான உன்னதமான குறும்படம் வாய் பேசமுடியாத ஒரு சிறுவனின் ஏக்கத்தின் ஏமாற்றத்தை அப்பட்டமாக உணர்த்தும் படமும் மேலும் சிறு சேமிப்பின் விழிப்புணர்வை உணர்த்தும் படமாகவும் அமைந்துள்ளது. இதில் நடித்துள்ள சிறுவர்கள் சர்வசாதரணமாக நடித்துள்ளார்கள் நம் கிராமத்து தெருக்களில் அடிக்கடி பார்க்கும் உணர்வை ஏற்படுத்திய படம். படத்தின் இசையமைப்பு படம் முழுவதும் அட்டகாசமா அமைதியாக ஆக்ரமிப்பு செய்கிறது. மாணவர்களின் திறமைக்கு ஓர் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. இந்த படத்தை உருவாக்கிய அனைவரையும் வாழ்த்துவோமே.? முதலில் மேன்மேலும் வெற்றியடைய அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இந்த குறும்படம்  30.03.2012 சென்னையில் நடைபெற்ற கேட்வே என்ற போட்டியில் இரண்டாவது இடம் பரிசு பெற்றது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  இயக்குனர் விடிவெள்ளி, குறும்படம் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 
குறிப்பு: இந்த குறும்படம்  12.08.2012 அன்று மதியம் 12.00 - 1.00 மணி வரை மக்கள் டிவியில் திரைக்களம் என்ற குறும்படங்கள் நிகழ்ச்சியில் ஓளிபரப்பப்பட்டது.. பாசப்பறவைகள் இணையதள நேயர்கள் சார்பாக இந்த குறும்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.Follow by Email