Friday, December 27, 2013

394 வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்
வழக்கம் போல் அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் அந்த நாள் ஞாபகம் ஒலித்தொகுப்பு நட பைரவி மற்றும் பகாடி ராகங்களில் தமிழ் திரையிசையமைப்பாளர்கள் உருவாக்கிய பாடல் தொகுப்பு. அத்துடன் இந்த ராகங்களை விரும்பி கேட்ட நேயர்களும் இடம் பெறுகின்றன.  கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

நடபைரவி ராகத்தில் வெளிவந்த பாடல்கள்

1.ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
2.இந்த பொன்னான கைகள்
3.நினைக்கத்தெரிந்த மனமே
4.ராஜாவின் பார்வை ராணி
5.வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்
6.கங்கைகரை தோட்டம்

பகாடி ராகத்தில் வெளிவந்த பாடல்கள்

7.யாருக்கும் மாப்பிள்ளை யாரோ
8.அத்தை மகனே போய்வரவா
9.ம்லர் கொடுத்தேன்
10.கண்ணுக்கு குளமேது
11.முத்தான முத்தல்லவோ


Tuesday, December 24, 2013

393 பூ உறங்குது பொழுதும் உறங்குதுமக்கள் திலகத்தின் நினவு நாள்  -  மனதை மயக்கும் வானொலித் தொகுப்பு வழங்கியவர் அறிவிப்பாளர் பேராசிரியர் திரு.சூரியகாந்தன் அவருக்கு நன்றி.1.கல்யாண புடவை கட்டி-கல்யாணியின் கணவன்
2.க்ருநீலமலைமேலே -தாயே உனக்காக
3.கண்ணிலே இருப்பதென்ன -அம்பிகாபதி
4.சிரிப்பு பாதி அழுகை பாதி - எங்க வீட்டுப்பெண்
5.அம்மா என்பது தமிழ் வார்த்தை - டீச்சரம்மா
6.பூ உறங்குது பொழுதும் உறங்குது - தாய் சொல்லை தட்டாதே
7.முதல் என்பது தொடக்கம் - பூவும் பொட்டும்
8.ஆசையே அலை போலே - தை பிறந்தால் வழி பிறக்கும்.
மக்கள் திலகத்தின் நினைவு நாள் நேயர்களின் விருப்ப சிறப்பு ஒலித்தொகுப்பு வழங்கியவர் அறிவிப்பாளினி திருமதி.சந்த்ரா

1.சத்தியமே லட்சியமாய் கொள்ளடா - நீலமலைத்திருடன்
2.காவியமா நெஞ்சில் ஓவியமா - பாவை விளக்கு
3.பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை
4.இறைவா உன் மாளிகையில் - ஒளிவிளக்கு
5.பனி இல்லாத மார்கழியா - ஆனந்த ஜோதி
6.ஆதி மனிதன் காதலுக்கு பிறகு- பலே பாண்டியா
7.ஓர் ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண்
8.பொன்னு விளையற பூமியடா - மக்களை பெற்ற மகராசி
9.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்
10.அழகெனும் ஓவியம் இங்கே - ஊருக்கு உழைப்பவன்

Monday, December 16, 2013

392 இன்ப இரவு ராணி பௌர்ணமி நிலவுவணக்கம் நேயர்களே நீண்ட  இடைவெளிக்கு பிறகு சிறப்பான ஒலித்தொகுப்புடன் வந்துள்ளேன். வழக்கம் போல் அறிவிப்பாளார் திரு சூரியகாந்தன் அவர்க்ளின் இனிய குரலில். 

இந்த பதிவிலே பாடல் பட்டியல்கள்  இருக்காது  ஏனேன்றால்  கீழே உள்ள ஒலித் தொகுப்பை கேட்கும் முன் இதை படியுங்கள். தங்களுக்கு ஒரு சின்ன போட்டி கீழே கொடுத்துள்ள வார்த்தைகளை வாசியுங்கள் அந்த வார்த்தைகள்  துவக்கத்தில் வரும் பாடல்களை உங்களின் நினைவில் தோன்றிய பாடல்களை வரிசையாக பட்டியல் இடுங்கள் எவ்வளவு பாடல்களை சரியாக சொல்கிறீர்கள் என்று பார்க்கலாம். இணையதள  நேயர்கள் மிகவும் சரியாக சொல்லிவிடுவீர்கள் என்ற ஒரு நம்பிக்கை. எல்லா வார்த்தைகளையும் சரியாக எழுதியவர்களுக்கு ஒரு சபாஷை பெற்றுக்கொண்டு இனி 3 ஒலித்தொகுப்பையும் கேட்கலாம்.  அப்படியே  உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

"ஆடும் பாடும் ஆயிரம் மலர்கள் தேடி ஓடும் தூங்காத இன்ப இரவு ராணி பௌர்ணமி நிலவு."

ஒலித்தொகுப்பு - 1ஒலித்தொகுப்பு - 2
ஒலித்தொகுப்பு - 3

Friday, December 13, 2013

391 சூப்பர் ஸ்டார் ரஜினி வாரம்

சூப்பர் ஸ்டார் ரஜினி வாரம் (பிறந்தநாள் ஸ்பெஷல்)
Published on Dec 11, 2013
Album : Super Star's HOW IS IT - The Anthem
Song : Rajini Anthem
Executive Producer : Walle Chandran
Produced By : IP TELEMEDIA in associatio with FILMAKER INC
Music : Swaran Kishore
Lyrics : Aadhi
Singers : Sharmila - Rohit - Varun

Monday, December 2, 2013

390 பனிவிழும் இரவு

அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகரின் ராக தேடலில் உருவான திரையிசை ஒலித்தொகுப்பு கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.சின்னப்பொன்னு சேலை - ராகம் :நடபைரவி
2.பனிவிழும் இரவு - ராகம் :நடபைரவி
3.ஆராரோ பாடியது யாரோ - ராகம் :நடபைரவி
4.இதழில் கதை எழுதும் - ராகம் :லலிதா
5.செந்தாழம் பூவில் - ராகம் :பூபாளம்
6.ஒரு பொன்மானை - ராகம் :பூபாளம்
7.சின்னஞ்சிறு வயதில் -  ராகம் :ஆபேரி
8.என்னைத்தொட்டு -  ராகம் :ஆபேரி
9.குருவாயூரப்பா குருவாயூரப்பா -  ராகம் :ஆபேரி
10.உன் மனசுல பாட்டுதான் -  ராகம் :ஆபேரி


Tuesday, November 26, 2013

389 சோலைகுயிலே காலைக்கதிரேவணக்கம் நேயர்களே நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளேன்.  பாடல் தொகுப்புகள் பதிய நிறைய இருந்தும் நேரம் ஒதுக்க முடியவில்லை இடைவெளிக்கு மன்னிக்கவும்.

திரையிசை பாடல்களின் ராகங்களை அறிந்த் கொள்ளும் விதமாக பாமரமக்களூம் ரசிக்கும் படி  அற்புத ராகங்கள்  கொண்ட திரையிசை பாடல்கள் தினமும் நடுநிசியில் ஒலிப்பரப்புவது  யாழ் சுதாகரின் பாணி. அந்த வகையில் நான் தினமும் நடுநிசியில் பதிவு செய்து நேரம் கிடைக்கும் போது கேட்பது என் வழக்கம்.  இந்த ஒலித்தொகுப்பை தொடர்ந்து வழங்கி வரும் வானொலி அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களுக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.
1.போவோமா ஊர்கோலம் - கீரவாணி ராகம்
2.கொடியிலே மல்லிக்கைப்பூ - கீரவாணி ராகம்
3.தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி -கீரவாணி ராகம்
4.சோலைகுயிலே காலைக்கதிரே - மத்யமாவதி ராகம்
5. என் கல்யாண வைபோகம் - மத்யமாவதி ராகம்
6.கண்மணி நீவர காத்திருந்தேன் - மலயமாருதம்
7.பூங்கதவே தாழ் திறவாய் - மாயமாளகௌல
8.பூவ எடுத்து ஒரு மாலை -மாயமாளகௌல
9.இதோ இதோ என் நெஞ்சிலே - மாயமாளகௌல
10.தானா வந்த சந்தனமே - கரகரப் பிரியா
11. தூளி ஆட வந்த - கரகரப் பிரியா
12.கம்பன் ஏமாந்தான் - ??
13.கண்ணே மலைமானே - காபி
14.சந்தத்தில் பாட கவிதை - காபி

Thursday, September 19, 2013

388 பாடும் போது நான்_______?

இசைக்கேட்டால் புவி அசைந்தாடும் என்றால் புவிக்குள் இருக்கும் எல்லா ஜீவராசிகளும் இசைக்கு ஆட வேண்டுமே?  மனிதர்களுக்கு மட்டும் கடவுள் ஸ்பெஷலாக ஆறாம் அறிவு தந்து ஒவ்வொரு நொடியையும் இசையை அனுபவிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். மற்ற செடி, கொடி, ஐந்து அறிவு பெற்ற ஜீவராசிகளுக்கும் இசையை உணரமுடியும் என்று முன்னோர்கள்
சொல்லியிருக்கிறார்கள். என்ன ரசித்து விட்டு விமர்சனம் செய்ய  முடியாது அவ்வளவு தான் மனிதர்களுக்கு மட்டும் கடவுள் விமர்சனம் செய்ய உரிமை கொடுத்துள்ளார்.   நான் பாடும் போது -----? என்று இந்த பதிவிற்க்கு த்லைப்பு. ஏனென்றால் ஒவ்வொருவரும் எப்படிவேண்டுமென்றால் பூர்த்தி செய்து கொள்ளாலாம்.  இசை ஜாம்பவான்கள் டி.எம்.எஸ், கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி மற்றும் பிரபல பாடகர்கள் குரலை தொடமுடியாவிட்டாலும்
பாத்ரூம் பாடகராக ஒவ்வொருவரும் இருந்திருப்பார்கள். ஆக மொத்தம் ஒவ்வொருவருக்கும் பாட்டு பாட ஆசை இருக்கும். இல்லையென்றாலும்  முயற்சி செய்யலாம்.  இந்த ஒலித்தொகுப்பை கேட்டால் நிச்சயம் பாட தோன்றும். நீண்ட இடைவெளி பிறகு இந்த இனிய பாடல் தொகுப்பு கேட்டேன். அடடே பதியலாமே என்று உங்களூக்கு வழங்கியிருக்கிறேன். இந்த ஒலித்தொகுப்பை அமைதியான குரலில் அறிவிப்பாளினி திருமதி.சந்தரா அவர்கள் அவருக்கே உரித்த பாணியில் திறம்பட வழங்கியிருக்கிறார்கள். அவருக்கு பாசப்பறவைகள் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.


ஒலித்தொகுப்பு 1

1. இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்
2. பாடும் போது நான் தென்றல் காற்று
3. பாட்டு வரும் உன்னை பார்த்துக்கொண்டு
4. பாட்டு பாடவா பார்த்து பேசவா
5. பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
6. பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்
ஒலித்தொகுப்பு 2

7. நான் ஒரு மேடைப் பாடகன்
8. பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்து
9. பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதை
10.என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து பாடல்கள்
11.பாட்டு ஒரே ஒரு பாட்டு
12.ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் நான் பாட
Wednesday, September 11, 2013

387 நீ எங்கே என் நினைவுகள் அங்கே
எஸ்.எம்.சுப்பையா நாயுடு

நீண்ட இடைவெளியின் பிறகு இந்த பதிவு  திரையிசை ஜாம்பவான்கள் வரிசையில் முதன்மையானவர்  எஸ்.எம்.எஸ் என்று அன்பாக திரையுலகம் அழைக்கும் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களின் இசை அமைப்பில் வெளிவந்த இனிமையான பாடல் தொகுப்பைத்தான் இரண்டு பிரிவுகளாக கேட்க இருக்கிறோம். தொகுப்பில் அனைத்துமே பிரபலமான பாடல்கள்  இவற்றை தனக்கே உரித்தான பாணியில் வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் திரு.சூரிய காந்தன் அவருக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.


1.தொட்ட இடம் துலங்க வரும்
2.அன்று நினைத்தோம் அதற்கு உழைத்தோம்
3.எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
4.உழைப்பிதலா உழைப்பே இன்பம்
5.அன்னையைப்போல் ஒரு தெய்வம் இல்லை
6.எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
7.சபாஷ் தம்பி.. சபாஷ் தம்பி
8.திருடாதே பாப்பா திருடாதே
9.ஊருக்கெல்லாம் கார் ஓட்டும் ராஜா
10.அழகின் காலடியில் அமைதி காணவந்தேன்
11.நீ எங்கே என் நினைவுகள் அங்கேFriday, July 19, 2013

386 தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே


இன்றைய நாளிதழ் உபயம் நன்றி: தினமலர்

தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே  ..

நடிகர் சிவக்குமார் அவர்களின் அஞ்சலி ஒளிக்கோப்புநேற்று மாலை இணையத்தில் இருக்கும் போது துயரமான செய்தி வாலி அவர்கள் உயிர் நீத்தார் என்று.  என் மனதை என்னெனவோ செய்தது.  எவ்வளவு பாடல்கள் வாலி ஐயாவி வரிகளில் அற்புதமான பாடல்கள் என் பல இரவு தூக்கத்தை தூங்கவிடாமல் செய்தது என்றால் அது மிகையாகாது.  வழக்கம் போல் வானொலியில் அவரின் அஞ்சலி நிகழ்ச்சியாக மயிலிறகை அறிவிப்பாளர் கா.சுந்தர்ராஜன் அவர்கள் வழங்கினார்.  வழக்க்ம் போல் உற்சாகத்துடன் கணீர் குரலோடு வருபவர் நிகழ்ச்சி முழுவதும்  ஒரு வித சோகத்தை  பேச முடியாமல் தன் குரலோடு  வாலி ஐயாவின் பாடல்களை வழங்கியது  மனதிற்க்கு இதமாக இருந்தது.  

என்றென்றும் ஜீவ நதியாக ஊற்றெடுக்கும் வாலி ஐயாவின் பாடல்களால் இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.  அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும்  பாசப்பறவைகள் இணையதள ரசிகர்கள் சார்பாக  எனது கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.

1.அம்மா என்றால் அன்பு
2.நல்ல பேரை வாங்க வேண்டும்
3.தரை மேல் பிறக்க வைத்தான்
4.செல்லக்கிளியே மெல்ல பேசு
5.தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை
6.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
7.நாளூம் ஒரு மேடை
8.என்னை பாட வைத்தவன் ஒருவன்
9.ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்
10.புதிய வானம் புதிய பூமி
11.எத்தனை பெரிய மனிதனுக்கு
12.புத்தன் ஏசு காந்தி பிறந்தது

பகுதி -1பகுதி -2
Monday, June 3, 2013

385 இன்று போய் நாளை வாராய்

அந்தகால  திரையிசை ரசிகர்கள் தவிர  இயக்குனர் கே.சோமு அவர்களைப் பற்றி இன்றைய இளைஞர்கள் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏன் நானும் அதிகம் அறிந்ததில்லை. சென்ற வாரம்  வானொலி நிகழ்ச்சியில் கேட்டேன்.  வழக்கம் போல் அறிதான தகவல்கள் பலவற்றை  நமக்காக தேடிப் பிடித்து இனிய பாடல்கள் நமக்காக வழங்கிய்வர் அறிவிப்பாளர் இந்த வலைப்பூவின் மீது அதீத அன்பை கொண்டவர் திரு.ரவி அவர்கள். இவரின் பதிவு நீண்ட நாடகள் கழித்து பதிகின்றேன். மகிழ்ச்சியாக இருந்தது.  அறிவிப்பாளருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.  இதோ அன்பர்களே இயக்குனர் கே.சோமு பற்றிய தகவல்களூடன் அவர் படைப்பில் வெளி வந்த படங்களின் இனிய பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

பகுதி 11.மாதா பிதா குரு தெய்வம்
2.நான் பெற்ற செல்வம்
3.இவரே தான் அவரே
4.பொன்னும் மனியும் நிறைந்ததே
5.சீமை சிரித்தன??
6.உலகில் சிறந்தது??
7.சிட்டு சிட்டு குருவி சேதி


பகுதி 28.மணப்பாறை மாடு கட்டி
9.பொன்னு மாப்பிள்ளை ஒன்னு போகுது
10.நீண்ட கொடியுடைய வேந்தனே
11.காவீயமா நெஞ்சில் ஓவியமா
12.கண்ணிருந்தும் குருடாகி
13.வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும்
14.இன்று போய் நாளை வாராய்


இயக்குனர் கே.சோமு அவர்களை பற்றி மேலு விவரங்கள் இங்கே.

Sunday, May 26, 2013

384 நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
பல்லாயிரக்கணக்கான இசை ரசிகர்களின் கண்ணீர்க் கதறல்களுக்கு மத்தியில் தீயுடன் சங்கமமாகியது டி.எம். சவுந்தரராஜனின் உடல்... பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன்( வயது 91) சென்னையில் நேற்று காலமானார். என்ற செய்தி கேள்பட்டதும் உடனே  பதிய முடியாவிட்டாலும் 
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே என்று ஏழிசை வேந்தன் டி.எம். சௌந்தரராஜன் குரலில் மயங்கிய உள்ளங்கள் அவர்களின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியாக கீழே உள்ள இறுதி சடங்கின் காட்சி அமைந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த ஒலி, ஒளி ஊடங்ககளும் இரங்கலை தெரிவித்து  அவரின்  இனிமையான காலத்தால் மறக்க முடியாத படி இசை ரசிகர்களின் உள்ளத்தையும்  அசைத்து  போட்டு விட்டது  என்பது தான் உண்மை.

இதோ இணையதள நேயர்கள் சார்பாக  இந்த பாசப்பறவைகள் வலைப்பூவும் தன் கண்ணீர் அஞ்சலியை  செலுத்துகிறது.  வான் வெளியில் ஒலி உலா வந்த அவரின் இனிய நினவு குரலின் தொகுப்பு நிகழ்ச்சி இன்று  ஏழிசை மன்னர் டி.எம்.எஸ் அவர்களை நினைந்து நினைந்துநெஞ்சம் உருகுகிறது.

கோவை ரசிகர்களின் ஒட்டு மொத்த உணர்வுகளை பிரதிபலித்து  மிகவும் சிறப்பாக இந்த இரங்கல் ஒலித்தொகுப்பை  வழங்கிய அறிவிப்பாளர் பேராசிரியர் திரு.சூரியகாந்தன் அவர்களுக்கு நன்றி.பகுதி 11.பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை
2.அண்ணையை போல் ஒரு தெய்வம் இல்லை
3.இரவும் வரும் பகலும் வரும்
4.நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
5.செல்லக்கிளியே மெல்லப் பேசு
6.இரண்டும் மனம் வேண்டும்

பகுதி 2
7.செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
8.முருகா என்றதும் உருகாதா மனம்
9.மெழுகுவர்த்து எரிகின்றது
10.வாய்மையே வெல்லுமடா
11.தண்ணீரிலே தாமரைப்பூ

Monday, April 29, 2013

383 தாழம்பூவின் நறுமணத்தில்


இந்த பாடல்களை இதே வலைப்பூவில் பல தடவை கேட்டிருந்தாலும் . அந்த பாடல்களில் சம்பந்தபட்டவர்களின் தகவல்களை கேட்டுக்கொண்டே பாடல்களை மீண்டும் கேட்பதும் கூட ஒரு ஸ்வாரிஸ்யம் தான்.  இந்த பதிவில் இசையமைப்பாளர் மாமா திரு. கே.வி.மகாதேவன் அவர்களின் பாடல்களை தான் அறிவிப்பாளர் திரு. க.சுந்தரராஜன் அவர்கள் மிகவும் இனிமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார். இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

கே.வி.மஹாதேவன்

1.மயக்கமென்ன இந்த மௌனமென்ன
2.செங்கனிவாய் திறந்து சிரித்திடுவாய்
3.தாழம்பூவின் நறுமணத்தில்
4.காட்டு மல்லி பூத்திருக்க
 


5.சரியா தப்பா சரியா தப்பா
6.ஏரிக்கரையின் மேலே
7.பொன்னு வெளயற பூமியடா
8.அமுதும் தேனும் எதற்கு
9.நலந்தானா நலந்தானா
10.நானாட்சி செய்து வரும்

Monday, April 8, 2013

382 உள்ளத்தின் கதவுகள் கண்களடாபழைய பாடல்கள் பல தடவை வானொலிகளில் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம் அவை  ஒவ்வொன்றும் நம்  வாழ்க்கையுடன் ஏதாவது  நிகழ்ச்சிகளை நினைவு படுத்தும் பாடல்களாக இருக்கும்  அதுபோல எனக்கு  இருந்துள்ளன.  சில பாடல்களை எழுதியவர்  பெயர் கூட மறந்திருப்போம்  அந்த வகையில் நமக்கு பிடித்த பாடல்களை  எழுதியவர் பெயர்  தெரிந்தால்  அடடே இவரா எழுதியவர் என்று அச்சரியப்பட்டுருக்கிறோம்.   அது போல  இதோ இந்த ஒலித்தொகுப்பில்  பதிந்துள்ள பாடல்களை  அனைத்தையும்  எழுதியவர் பாடலாசிரியர் திரு.ஆலங்குடி சோமு  இவரைப்பற்றி  கேள்வி பட்டிருக்கிறேன் அவ்வளவே.  சென்ற வாரம் இவரின் பாட்ல தொகுப்பை வானொலியில் நட்சத்திர மயிலிறகாக கேட்கும் போது  பல தடவை அடடே போட வைத்தன.  வழங்கியவர் வேறு யாருமில்லை  இந்த வலைபூவில் தொடர்ந்து  பதிவுகளாக வழங்கிய உதவியவர் பேராசிரியர்  அறிவிப்பாளர் திரு. சூரிய காந்தன் சார் அவர்கள் தான் அவருக்கு இணயதள நேய்ரகள் சார்பாக நன்றி.  

குறிப்பு: இணையத்தில்  பாடலாசிரியர் திரு.ஆலங்குடி சோமு அவர்களின் படத்தை தேடித்தேடி பார்த்தேன் அகப்பட்ட பாடில்லை யாரிடமாவது இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கலாம் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

பகுதி -1
1.பொன்மகள் வந்தாள்
2.செங்கனி வாய் திறந்து
3.உள்ளத்தின் கதவுகள் கண்களடா
4.தாயில்லாமல் நானில்லை
5.என்னப்பற்வை சிறகடித்து

பகுதி -2
 

6.என்னம்மா ராணி
7.ஒரு கொடியில் இரு மலர்கள்
8.வெள்ளை மனம் கொண்ட
9.பிறந்த இடம் தேடி
10.வெள்ளி நிலா வானத்திலே

Thursday, April 4, 2013

381 கண்ணிலே அன்பிருந்தால்


இந்த ஒலித்தொகுப்பு ஸ்வாரசியமான சொல்லோவியம் அமைந்த ஒலித்தொகுப்பு  வழங்கியவர் பேராசிரியர்  அறிவிப்பாளர் திரு. சூரிய காந்தன் அவர்கள் இது போன்ற பல நிகழ்ச்சிகள் வழங்கியிருக்கிறார். நேற்று நான் கேட்ட நிகழ்ச்சி தான் இவை. கீழ் கண்ட சொல்லோவியத்தில் தான் இன்றைய பாடல் தொகுப்பு இரண்டு பகுதிகளாக பதிவு செய்து உங்களுக்காக வழங்கியிருக்கிறேன் கேட்டு மகிழுங்கள்.


கண்ணுக்கு கண்ணானால் கண்ணா கண்ணில் கண் காண கண்கள் கண்எதிரே
கண்ணும் கண்ணிலே கண்களும் கண்ணே.
1.கண்ணுக்கு குலம் எது
2.கண்ணானால் இமை ஆவேன்
3.கண்ணா கருமை நிறக்கண்ணா
4.கண்ணில் கண்டதெல்லாம்
5.கண் படைத்தான் உன்னை
6.காண வந்த காட்சியென்ன7.கண்கள் இரண்டும் உன்னை கண்டு
8.கண் எதிரே தோன்றினாள்
9.கண்ணும் கண்ணும் பேசியது
10.கண்ணிலே அன்பிருந்தால்
11.கண்களும் காவடி சிந்தாகட்டும்
12.கண்ணே கனியே முத்தேMonday, April 1, 2013

380 சிந்தாமல் சிரிப்பால் சிங்காரபாப்பாமென்மையும் பெண்மையும் கலந்த கானங்கள் அறிவிப்பாளர் திரு. சூரியகாந்தன் குரலில் இனிய பாடல்கள் தொகுப்பு. இணையதள நேயர்கள் சார்பாக பேராசிரியர் அறிவிப்பாளர் அவர்களூக்கு நன்றி.

1.ஆலயமணியின் ஓசையில்
2.காட்டுகுள்ளே திருவிழா
3.சொல்லமல் தெரியவேண்டுமே
4.பிறந்த இடம் தேடி
5.அடடா என்ன அழகு
6.ஒருமுறை தான் வரும்
7.துள்ளாத மனமும் துள்ளூம்
8.கண்ணிலே இருப்பதென்ன
9.அழகான பொன்னு நான்
10.ஓ ரசிக்கும் சீமானே
11.சிந்தாமல் சிரிப்பால் சிங்காரபாப்பா

Monday, March 25, 2013

379 பிறந்த நாள் இன்று பிறந்தநாள் நேற்று 24 தேதியன்று வெங்கலகுரலோன் திரு.டி.எம்.சவுந்த்ரரான் ஐயா அவர்களின் 91 ஆவது பிறந்த நாள். நேற்று அன்று சென்னையில் அவர் இல்லை வெளியூர் சென்று இருப்பதாக கேள்விப்பட்டேன்.  கோவையில் எதேச்சையாக வானவில் வழக்கம் போல் மயிலிறகு கேட்கலாம் என்று திருப்பிய போது  அறிவிப்பாளர் பேராசிரியர் திரு.சூரிய காந்தன் அவர்கள் தன் காந்த குரலில் டி.எம்.எஸ் ஐயாவின் சிறப்பு பிறந்த நாள் நிகழ்ச்சியை வழங்கினார். இதோ அவர் விரும்பி கேட்டுக்கொண்டதன் பேரில் பாசப்பறவைகள் தளத்தில் அவர் வழங்கிய ஒலித்தொகுப்பு மிகவும் இனிமையாக இருந்தது பல அறிய தகவல்களூடன் தொகுப்பை வழங்கினார். அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.பிறந்த நாள் இன்று பிறந்தநாள் >> கேட்ட்வரெல்லாம் பாடலாம் >> அள்ளி கொண்டை முடிச்சு >> ஏசு உலாவும் இன்பநாதம் ஜீவசங்கீதம் >> கைவிரலில் பிறந்தது நாதம் >> திருசெந்தூரின் கடலோரத்தில் >> முத்தை தருபத்தி திருநகை >> வாய்மையே வெல்லுமடா >> அகரமுதல எழுத்தெல்லாம் நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. (இறுதியில் பதிவு செய்யும் போது நேரப்பிரச்சனையால் கடைசி பாடல் பதிவாகவில்லை எனக்கு வருத்தமாக உள்ளது)உலகத்தில் உள்ள தமிழ் மக்களிடையே, "டி.எம்.எஸ்.,' என்றால் அறியாதவர் இருக்க முடியாது. இனிமையான குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு,  கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல், உணர்ச்சிப்பூர்வமாக பாடுவது ஆகியவை, டி.எம்.சவுந்திரராஜனின் தனிச் சிறப்பு. தமிழ் சினிமா இசை உலகில், நீண்ட காலம், இவர் இருந்த இடத்தை இன்னும் யாராலும் பிடிக்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. 

இவரது பழைய பாடல்களின் சிறப்புக்கு காரணம் கேட்டதற்கு, "சிறந்த கவிஞர்கள், காலத்தால் அழியாத தத்துவங்களோடு எழுதிய வரிகள், அதற்கு உயிரோட்டமான மெட்டமைத்து கொடுத்த இசை அமைப்பாளர்கள் துணையுடனும், கதாபாத்திரங்களின் நல்ல நடிப்போடும் ஒட்டி வந்ததால், நான் பாடிய பாடல்கள் இன்றும் மக்களால் நேசிக்கப்படுகிறது...' என்று அடக்கத்துடன் கூறுகிறார் டி.எம்.எஸ்.,  தற்சமயம், 91வது பிறந்த நாள் கொண்டாடும் இவர், இப்போது திரைப்படங் களில் பாடாவிட்டாலும், இவர் பாடிய பழைய பாடல்கள், வானொலி, தொலைக்காட்சி மூலம், தினசரி செவிகளில் ஒலிக்காத நாளில்லை. பிரபலமான கலைஞர்களை எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், அவர்களுக்கு மேடையில் பொன்னாடை அணிவித்து, ஷீல்டு கொடுப்பது வாடிக்கை. ஒவ்வொரு பிரபலங்கள் வீட்டிலும், ஷீல்டுகள் நிரம்பியிருக்கும். அதே போன்று, டி.எம்.எஸ்., வீட்டிலும் ஏராளமான ஷீல்டுகள் உள்ளன. ஷீல்டு என்றதும், ஒரு பிளாஷ்பேக் நினைவை டி.எம்.எஸ்., கூறினார்: 

கடந்த 1959ல், சிவாஜி கணேசன் நடித்த, "பாகப்பிரிவினை' படம் 100 நாள் ஓடியது. அதைக் கொண்டாட, தயாரிப்பாளர் வேலுமணி ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார். அந்த படத்தில் இவர் பாடிய, "ஏன் பிறந்தாய் மகனே...' என்ற பாடல், மிகவும் பிரபலமானது. பின்னணி பாடிய இவருக்கும் அழைப்பு.
அன்று மாலை பட்டு வேஷ்டி, ஜிப்பா அணிந்து, விசிறி மடிப்பு அங்க வஸ்திரம் தோளில் புரள, வைர மோதிரங்கள் விரல்களில் மின்ன, அத்தர் வாசனையுடன் விழாவிற்கு சென்றார் டி.எம்.எஸ்., மாலை மரியாதைகளுக் கிடையே, அரசியல் பிரமுகர்களும் திரை உலக பிரபலங்களும் பேசினர். நடிகர்களும், மற்றவர்களும் பரிசுகளை பெற்றுக் கொண்டனர். காத்திருந்து பார்த்தார் டி.எம்.எஸ்., இவருக்கோ, மற்ற பின்னணி பாடகர், பாடகியருக்கோ எந்த பரிசும் இல்லை. நிகழ்ச்சி முடிந்து வந்த அன்றிரவு, தூங்கவில்லை.
மறுநாளே, விழா ஏற்பாடு செய்த பாகப்பிரிவினை தயாரிப்பாளர் வேலுமணியிடம், "ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்கள் எவ்வளவு முக்கியமானது என்பது நீங்கள் அறியாததல்ல. இதில் உள்ள பாட்டுகளை நீக்கிவிட்டு, படத்தை ஓட்டிப்பாருங்க... அதோட முக்கியத்துவம் தெரியும். அப்படி இருக்கும்போது, பின்னணி பாடியவர்களுக்கு பரிசு கொடுக்கும் எண்ணம் வரவில்லையே...' என்று, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் டி.எம்.எஸ்.,  தாராள மனமும், கலைஞர்களிடம் நட்பும் கொண்டவர் தயாரிப்பாளர் வேலுமணி. அவர், டி.எம்.எஸ்.,சின் வருத்தத்தை புரிந்து கொண்டார். அடுத்த படத்திலிருந்து பின்னணி பாடுபவர்களுக்கும் விருதுகள் வழங்குவோம் என்று அறிவித்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு பட விழாவிலும், டி.எம்.எஸ்., மட்டுமின்றி, அவரது முயற்சியால், மற்ற பின்னணி பாடகர்களும் ஷீல்டு கொடுத்து கவுரவிக்கப்பட்டனர்.  எந்த பின்னணி பாடகருக்கும் இல்லாத வகையில், டி.எம்.எஸ்.,சுக்கு இன்றும் ரசிகர் மன்றம் உள்ளது. ரசிகர்கள் என்று சொல்லாமல், "டி.எம்.எஸ்., பக்தர்கள்' என்று கூறிக் கொள்வர். அதில், பெரும்பாலும் இளைஞர்கள் உள்ளது தான் ஆச்சரியம். ஒவ்வொரு ஆண்டும், டி.எம்.எஸ்., பிறந்த நாள் விழாவில், சாலமன் பாப்பையா, லியோனி குழுவினரின், "பாட்டு பட்டி மன்றம்' நடத்தி, வசதி அற்றவர்களுக்கு தேவையான உதவிகள் புரிகின்றனர். இந்த ஆண்டும், தன் பக்தர்கள் மத்தியில், 91வது பிறந்த நாள் கொண்டாடும் டி.எம்.எஸ்.,சுக்கு நாமும் வாழ்த்துக் கூறுவோம்.
***

டி.எம்.எஸ்., தான், மாணவ பருவத்தில் பட்ட கஷ்டத்தை நினைத்து, திரை உலகில் பிரபலமானவுடன், காலமான தன் மகன் பெயரில், ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி, வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி உதவிகளை இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறார்.
***

மதுரையில், அரசமரம் இசை, இலக்கிய விழாவில், டி.எம்.எஸ்., நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய அப்போதைய அமைச்சர் காளிமுத்து, டி.எம்.எஸ்., பாடல் பற்றி இப்படி கூறினார்:
சிங்கத்தின் முழக்கம்
சிறுத்தையின் பாய்ச்சல்
வேங்கையின் கம்பீரம்
புலியின் வேகம்
மின்னலின் வீச்சு
அருவியின் ஓட்டம்
தென்றலின் தெம்மாங்கு
நிலவின் குளிர்ச்சி...
ஆகிய அவ்வளவும் அடங்கியிருக்கும் குரல்தான் டி.எம்.எஸ்.,சின் சங்கீத மணிக்குரல், அவர் வீரப்பாட்டு பாடினால் கோழைக்கும் வீரம் வரும். சோகப்பாட்டு பாடினால் கல்மனம் கொண்டவருக்கும் கண்ணீர் வரும். காதல்பாட்டு பாடினாலோ சந்நியாசிக்கும் காதல் வரும் என்று, கூறியதும், அந்த பகுதியே கை தட்டலால் அதிர்ந்தது.

அறிய தகவல்கள் நன்றி :: தினமலர்


இந்த ஒலித்தொகுப்பை இங்கே பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்.
மேலும்,   ஐரோப்பிய வானொலியில் டி.எம்.எஸ் ஐயா அவர்களின்  பிறந்த நாள் அன்று மூன்று தொகுப்புகள் ஒலிபரப்பினார்கள் அதன் ஒலித்தொகுப்புகள் கீழே உள்ளன. அதில் ஐயா அவர்கள் வாழ்த்த்திபேசிய அவரின் குரலையும் கேட்டு மகிழுங்கள்.


இந்த மூன்று ஒலித்தொகுப்புகளையும்  வழங்கியவர் அறிவிப்பளினி திருமதி. ராகின் பாஸ்கரன், ஜெர்மனி. அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

முதல் தொகுப்பு

இரண்டாவது தொகுப்புமூன்றாவது தொகுப்பு

 

Monday, March 18, 2013

378 நல்லது கண்ணே கனவு கனிந்ததுநல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு என்ற இந்த இனிய பாடல் தொகுப்புடன் ஐரோப்பிய தமிழ் வானொலியின் அறிவிப்பாளினி திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் ETR வானொலியில் இரவின் துயில் என்ற தலைப்பில் தினந்தோறும்  இரவு மணி 11 முதல் 12 மணி வரை வழங்குகிறார். இந்த முதல் நிகழ்ச்சியை எனக்கு அனுப்பியது மிக்க மகிழ்ச்சியை தந்தது. தொகுப்பில் பாடல்கள் அனைத்து பல தடவை கேட்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க ஒரு தனிசுவை தான். இந்த நிகழ்ச்சியை வழங்கிய ராகினி பாஸ்கரன் அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.


Friday, March 8, 2013

377 உன்னைக் காணாமல் கண்ணின்றுபிரபலங்களின் படிக்கட்டுகள் வானொலி நிகழ்ச்சியில்  கவிஞர்  திருமதி. உமா மகேஸ்வரி பேட்டி காணும் அறிவிப்பாளர்  சின்னதம்பி புகழ் திரு. ராஜ்குமார். கவிஞரிடம் இருந்து எப்படி லாகவமாக நறுக் நறுக் கேள்விகள் கேட்டு ஸ்வாரசியமான பதில்கள் பெறுகிறார் அறிவிப்பாளர் இவரிடம் எனக்கு பிடித்த ஒன்று இது தான்  பல பேட்டிகளை வானொலியில் கேட்டுள்ளேன்  கேள்வி கேட்கிறேன் பேர்வழி என்ற பெயரில்  அவர்களே கேட்டு விட்டு பதிலை இப்படிங்களா?.. அப்படி தானே?  பதிலும் சொல்லிவிட்டு  விருந்தினரை பேசவிடமாட்டார்கள்.  நீங்களூம் கேளுங்கள் நான் சொல்வதை உணர்வீர்கள்.  இந்த நிகழ்ச்சியை வழங்கிய சூரியன் பண்பலைக்கு இணைய தள நேயர்கள் சார்பாக நன்றிகள்.

1.உன்னைக் காணாமல் கண்ணின்று
2.செந்தாழம் பூவில் வந்தாடும்
3.அக்னி குஞ்சு ஒன்று கண்டேன்
4.சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையில்
5.தமிழுக்கும் அமுது என்று பேர்
6.நாளை இந்த வேளை பார்த்து
7.ரோஜாவை தாலாட்டும் தென்றல்Friday, February 15, 2013

376 ஜீவன் - குறும்படம்


 
உண்டியல்  குறும்பட புகழ் இயக்குனர் திரு.விடிவெள்ளி அவர்களின் மற்றுமொரு அற்புதமான படைப்பு இந்த குறும்படம். இந்த படத்தில் வசனங்கள், நடிப்பு யாவையும் மிகைப்படுத்தாமல்  கையாளப்பட்டிருக்கிறது.  இசை ஸ்வரன் கிஷோர்  ஆரவாரமில்லாத மனதை மயக்கும் இசை படத்திற்க்கு மிகவும் உறுதுணையாக உள்ளது.  இந்த குறும்படம் உங்களூக்கு நிச்சயம் பிடிக்கும் பார்த்து விட்டு தங்களின் மனதில் தோன்றும் உணர்வுகளை வரிகளாக தாருங்கள் அவை வளரும் கலைஞர் மாணவர்களூக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.Wednesday, February 6, 2013

375 வதனமே சந்திரபிம்மமோநாம் பிறப்பதற்க்கு முன்  வாழ்ந்தவர்கள்  திரையிசை ஜாம்பவான் ஸ்ரீ.பாபநாச சிவன் அவர்கள்.  பல பழைய பாடல்களை நாம் கேட்டிருப்போம் அப்போது நல்ல இனிய மெட்டுகளை கொண்ட பாடல்கள்  உருவாக்கியவர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமில்லாமல் கேட்டு மகிழ்வோம்.  இது போன்ற ஒலித்தொகுப்புகளில்  கேட்கும் போது தான் அடடே  இவர் போட்ட மெட்டா என்று ஆச்சரியபட்டு போவோம். அது போன்று தான் இருந்தது இந்த ஒலித்தொகுப்பை நான் கேட்கும் போது  என் உணர்வு.  அவரைப்பற்றி இனிய தகவல்களூடன் அறிவிப்பாளர் திருமதி.ஸ்ரீவிதயா வரதராஜன் அவர்கள் வழங்கினார் அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றிகள்.


1.என்ன செய்தாலும்
2.அற்புத லீலைகளை
3.அண்ணையும் தந்தையும்
4.ஓ மாதா மாதா
5.நடையலங்காரம் கண்டேன்
6.கிரிதர கோபாலா
7.எங்கும் நிறைந்தாயே
8.வதனமே ச்ந்திரபிம்மமோ
9.பிறவா வரம் தாரோ
10.அம்பாள் மனம்கனிந்து உனது
11.மன்மத லீலையை வென்றோர்
12.பூமியில் மானிட ஜென்மம்
13.எனது பிம்பமே??
14.மனம் தருவேன்
15.ஒரு நாள் ஒரு பொழுதாகினும்ஒலித்தொகுப்பை இங்கே பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்.

374 வெள்ளி நிலா வானத்திலேஇசையுலக ஜாம்பவான்  இசையமைப்பாளர் திரு.டி.ஆர்.பாப்பா அவர்களின்  சிறப்பு தொகுப்பு ஏற்கெனவே இந்த வலைப்பூவில் பதிந்திருந்தாலும்.  மீண்டும் இனிய பாடல்களுடன் அவருடைய அறிதான தகவல்களூடன்  நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அறிவிப்பாளர் திருமதி. ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்கள். இந்த வலைப்பூவில் இவரின் இனிய குரலை கேட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன  சமீபத்தில் இவரின் இந்த நிகழ்ச்சி கேட்டேன்  மனதிற்க்கும் மிகவும் அமைதியை தந்தது,. உடனே உங்கள் செவிகளுக்கும். கேட்டு விட்டு தங்கள் கருத்துகளையும் தாருங்கள் அன்பர்களே. 

1.ஆட வேண்டும் மயிலே
2.முத்தமா..முத்தமா
3.உள்ளம் தேடாது
4.ஆசை கூடும்
5.வருவேன் நான் உனது
6.குத்தால அருவியிலே
7.ஆசை பொங்குமா
8.திருமணம் ஆகாத பெண்ணே
9.வெள்ளி நிலா வானத்திலே
10.யார் சொல்லுவார் நிலவே
11.ஆண்டவன் ஒருவன்
12.இறைவன் என்றொரு கவிஞன்பதிவிற்க்கம் இங்கே

373 ராசி நல்ல ராசி

டாக்டர் பக்தவசலம் கோவையில் இவரைப் பற்றி தெரியாதவர் யாரும் இல்லை எனலாம்.  அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் சொன்னது போல் கோவையின் மத்தியில் மிக பிரமாண்டாமாக வீற்றிருக்கும் கே.ஜி. மருத்துவமணையின் நிர்வாகி. இவர்  பேட்டி அளித்த ஓர் நிகழ்ச்சி பண்பலையில் 75 ஆவது வார சிறப்பு நிகழ்ச்சியாக ஒலிபரப்பினார்கள்.  அவரின் உருவம் போலவே  அவர் பேசும் பேச்சும் குரலும்  கம்பீரமாக இருந்தன  நல்ல பல கருத்துக்களை சமூகத்திற்க்கு  ஆர்வத்துடன் தெரிவித்தார் என்ன என்பதை தாங்களூம் இந்த ஒலித்தொகுப்பில் இனிய பாடல்களூடன் கேட்டு தெரிந்து கொள்ளலாம். உடன் தங்களின் கருத்துக்களையும் தரலாம்.  இந்த நிகழ்ச்சியை வழங்கிய டாக்டர் ஜிபி அவர்களூக்கும்  அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் அவர்களூக்கும் இணைய தள நேயர்கள் சார்பாக நன்றி.


1.உன்னால் முடியும் தம்பி தம்பி
2.அக்னி குஞ்சு ஒன்று கண்டேன்
3.ராசி நல்ல ராசி
4.இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
5.உன்னை அறிந்தால் நீ
6.மனைவி அமைவதெல்லாம்
7.பனிவிழும் மலர்வனம்

ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

Wednesday, January 23, 2013

372 கீதா...கீதா ஒரு நாள்


எனது இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.ரவி அவர்கள் தன் ரம்மியமான குரலில் வழக்கம் போல் வித்தியாசான பாடல்களூடன் நேற்று மயிலிறகால் என் மனதை வருடினார். இதோ உங்கள் செவிகளுக்கும் அணிவித்து  அழகுபார்க்க விரும்புகிறேன்.  பாடல்களை கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை தாருங்கள் அன்பர்களே.

1.ஆசை வெச்சேன் ஆசை வெச்சேன் -பொம்மை கல்யாணம்
2.பூவாடை.. பாவாடை.. - தேடி வந்த செல்வம்
3.ஹஹ்ஹா இன்ப தேன் நிலவு - எதிர்கள் ஜாக்கிரதை
4.பக்கம் வந்து பக்கம் வந்து - யார் நீ
5.வீரமென்னும் பாவைதன்னை - தர்மம் எங்கே
6.காட்டு குயிலுக்கும் நாட்டு குயிலுக்கும் - அழகு நிலா
7.சிட்டு குருவிகென்ன கட்டுபாடு - சவாலே சமாளி
9.தஞ்சாவூர் சீமையிலே - தேர்திருவிழா
10.ஹவ் ஹவ் எத்தனை அழகு - அதே கண்கள்
11.ஜெனிதா வனிதா - அவன் தான் மனிதன்
12.வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது - அவளும் பெண்தானே
13.கீதா கீதா ஒரு நாள் - அவள்
14.ஜிலு ஜிலு குளு குளு - வெள்ளிக்கிழமை விரதம்
15.வாரேன்.. வழி காத்திருப்பேன் - உழைக்கும் கரங்கள்
ஒலிகோப்பு பதிவிறக்கம் இங்கே

Friday, January 4, 2013

371 சேதி கேட்டோம் சேதி கேட்டோம்
வெள்ளித்திரையில் நம்மை கடந்து சென்றவர்கள் பற்றிய நினவு ஒலிதொகுப்பு
இவை. மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் எனது அருமை நண்பர்
அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜே.சந்தீப். மறைந்த திரைகலைஞர்களைப் பற்றி பல தகவல்கள் சேகரித்து  இனிய பாடல்களுடன்  ஒரு ஒலித்தொகுப்பாக நேற்று இரவு வழங்கியதை இங்கே உங்களுக்காக அவருக்கு  இணைய ரசிகர்கள் சார்பாக நன்றி. வாழ்த்துக்கள் சந்தீப் சார்.


1. எடிட்டர் பாலகுருசிங்கம் - பொன்னொன்று பெண் அங்கு இல்லை
2. தக்‌ஷினாமூர்த்தி - மாசில்லா உண்மை காதலே
3. ஆர்.என்.கே. பிரசாத் -சின்ன கண்ணன் அழைக்கிறான்
4. எஸ்.என்.லக்‌ஷ்மி - சேதி கேட்டோம் சேதி கேட்டோம்
5. சன்முகசுந்தரி - தாயிற் சிறந்த கோவிலுமில்லை
6. என்னத்த கண்ணைய்யா - அட பாதங்களே நீங்க
7. எம்.சரோஜா - மாமியாருக்கு ஒரு சேதி
8. வி.ஜெயலக்‌ஷிமி - மாலை நேரமிது சோலக்குயில்
9. மைனாவதி - வண்டி உருண்டோட அச்சாணி
10.காகா ராதாகிருஷ்னன் - காதல் கனிரசமே
11.ஒளிப்பதிவாளர் கர்ணன்


370 பார்த்த ஞாபகம் இல்லையோ ?
 பார்த்த ஞாபகம் இல்லையோ ?  ஏன் இல்லை?  சமீபத்தில்  டி.வியில்  இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் நடிகை சௌர்கார் ஜானகி இருவரையும் பேட்டி நிகழ்ச்சி கண்டேன்.  பாலசந்தரை விட  பெரியவங்க சௌக்கார் ஜானகி  அவரைப்பற்றிய பல அறிய தகவல்களை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி. இதோ கீழே உள்ள ஒலிகோப்பு அதுவல்ல. வானொலியில் சில மாதங்களூக்கும் முன் அறிவிப்பாளர் எனது அருமை நண்பர் திரு. க.சுந்தரராஜன் தனக்கே உரிய பாணியில் அழுத்தம் திருத்தமாக பல அறிதான தகவல்களூடன்  இனிமையான பாடல்களை வழங்கி பேசி மிகவும் அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கேட்பதற்க்கு மகிழ்ச்சியாக இருந்தது. இதோ உங்கள் செவிகளுக்கும். கேட்டு  உங்கள் கருத்துகளையும் தாருங்கள்.1.அடுத்தாத்து அம்புஜத்தை
2.ஆனி முத்து வாங்கி வந்தேன்
3.பார்த்த ஞாபகம் இல்லையோ
4.புன்னகை மன்னன் பூவிழி
5.நீரோடும் வைகையிலே
6.இறைவா உன் மாளிகையில்
7.ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
8.படித்ததினால் அறிவு பெற்றோர்
9.யாருக்கு மாப்பிள்ளை
10.மாலைப்பொழுதினில் மயக்கத்திலே

Tuesday, January 1, 2013

369 அவ்வையாரின் மூதுரைபுதுவருட நிகழ்ச்சியாக சென்ற வாரம் வானொலியில் ஒலிபரப்பிய  அவ்வையாரின் மூதுரை வென்பாக்களில் இருந்து சில வென்பாக்கள் திரையிசையுடன் எப்படி இணைகிறது என்ற ஓர் அற்புதமான   ஒலித்தொகுப்புதான் இவை. இந்த ஒலித்தொகுப்பை குறிகிய காலத்தில் தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு. சந்துரு அவர்கள். இவரின்
சாந்தமான குரலில் மயிலிறாகா இரவு நேரத்தில் கேட்பதற்க்கு மனதிற்க்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு தனியார் உயர்நிலை பள்ளியில் ஆங்கில வகுப்பு எடுக்கும் ஆசரியரான இவர் தமிழ் மீது அபாரமான காதல் கொண்டவர்.அதன்
விளைவாக வந்தது தான் இந்த ஒலித்தொகுப்பு இப்பேர்பட்ட அறிதான ஒலித்தொகுப்புகள் பாசப்பறவைகள் தளத்தில் பதிய நான் மிகவும் பெருமைபடுகிறேன். பள்ளிப்படுவத்தில் ஒவையாரைப்பற்றி ஏட்டில் படித்தது பல வருடங்கள் கழித்து அவரின் மூதுரை வென்பாக்கள் சிலவற்றை திரையிசையுடன் கேட்கும் போது மனது இதமாக இருக்கிறது. இதை மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் எனது இனிய நணபர் திரு.சந்துரு அவர்களுக்கும் இதை உருவாக்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

குறிப்பு: ஒலித்தொகுப்பு சுமாராக இருந்தாலும் கேட்கும் படி இருக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்களூக்கு இங்கே பதிவிறக்கமாக வழங்குகிறேன் உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை எழுதுங்கள் அன்பர்களே.
சொல்லும் பொருள் தேடி ....

1. இளமையில் வறுமை >> பூஞ்சிட்டு கண்ணங்கள்

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.

2.அறிவு இல்லாதவனின் இழிவு  >> நான் ஒரு முட்டாளுங்க

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்.

3.அறிவு செல்வம் குணம் >> கல்வியா செல்வமா வீரமா

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.

4.காலமறிந்து செயல்படுவதே நன்று >>காலமிது காலமிது கண்ணுறங்கு

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

5.வஞ்சனை உள்ளவர் மறைந்தே இருப்பர் >>அங்கே சிரிப்பவர் சிரிக்கட்டும்

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

6.மருந்தும் உடன்பிறப்பும் >> முத்துக்கு முத்தாக

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.

7.மனைவியின் மாறாத மனது >> மனவி அமைவதெல்லாம்

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.

8. அடக்கத்தின் சிறப்பு >> இப்படித்தான் இருக்க வேண்டும்

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

9.நல்லவர்களால் நண்மை ஏற்படும்  >> நல்லவருகெல்லாம்

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

10.தீயவர்களின் தொடர்பு தீமைதரும் >> குற்றம் புரிந்தவன்

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

சொல்லுக்கு இறைத்த நீர் வாய்கால் வழி ஓடி..


தகவல்கள் :அவ்வையின் மூதுரை நன்றி தமிழ் களஞ்சியம்

Follow by Email