Tuesday, January 1, 2013

369 அவ்வையாரின் மூதுரைபுதுவருட நிகழ்ச்சியாக சென்ற வாரம் வானொலியில் ஒலிபரப்பிய  அவ்வையாரின் மூதுரை வென்பாக்களில் இருந்து சில வென்பாக்கள் திரையிசையுடன் எப்படி இணைகிறது என்ற ஓர் அற்புதமான   ஒலித்தொகுப்புதான் இவை. இந்த ஒலித்தொகுப்பை குறிகிய காலத்தில் தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு. சந்துரு அவர்கள். இவரின்
சாந்தமான குரலில் மயிலிறாகா இரவு நேரத்தில் கேட்பதற்க்கு மனதிற்க்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு தனியார் உயர்நிலை பள்ளியில் ஆங்கில வகுப்பு எடுக்கும் ஆசரியரான இவர் தமிழ் மீது அபாரமான காதல் கொண்டவர்.அதன்
விளைவாக வந்தது தான் இந்த ஒலித்தொகுப்பு இப்பேர்பட்ட அறிதான ஒலித்தொகுப்புகள் பாசப்பறவைகள் தளத்தில் பதிய நான் மிகவும் பெருமைபடுகிறேன். பள்ளிப்படுவத்தில் ஒவையாரைப்பற்றி ஏட்டில் படித்தது பல வருடங்கள் கழித்து அவரின் மூதுரை வென்பாக்கள் சிலவற்றை திரையிசையுடன் கேட்கும் போது மனது இதமாக இருக்கிறது. இதை மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் எனது இனிய நணபர் திரு.சந்துரு அவர்களுக்கும் இதை உருவாக்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

குறிப்பு: ஒலித்தொகுப்பு சுமாராக இருந்தாலும் கேட்கும் படி இருக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்களூக்கு இங்கே பதிவிறக்கமாக வழங்குகிறேன் உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை எழுதுங்கள் அன்பர்களே.
சொல்லும் பொருள் தேடி ....

1. இளமையில் வறுமை >> பூஞ்சிட்டு கண்ணங்கள்

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.

2.அறிவு இல்லாதவனின் இழிவு  >> நான் ஒரு முட்டாளுங்க

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்.

3.அறிவு செல்வம் குணம் >> கல்வியா செல்வமா வீரமா

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.

4.காலமறிந்து செயல்படுவதே நன்று >>காலமிது காலமிது கண்ணுறங்கு

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.

5.வஞ்சனை உள்ளவர் மறைந்தே இருப்பர் >>அங்கே சிரிப்பவர் சிரிக்கட்டும்

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

6.மருந்தும் உடன்பிறப்பும் >> முத்துக்கு முத்தாக

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.

7.மனைவியின் மாறாத மனது >> மனவி அமைவதெல்லாம்

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.

8. அடக்கத்தின் சிறப்பு >> இப்படித்தான் இருக்க வேண்டும்

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

9.நல்லவர்களால் நண்மை ஏற்படும்  >> நல்லவருகெல்லாம்

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

10.தீயவர்களின் தொடர்பு தீமைதரும் >> குற்றம் புரிந்தவன்

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

சொல்லுக்கு இறைத்த நீர் வாய்கால் வழி ஓடி..


தகவல்கள் :அவ்வையின் மூதுரை நன்றி தமிழ் களஞ்சியம்

No comments:

Follow by Email