Friday, February 15, 2013

376 ஜீவன் - குறும்படம்


 
உண்டியல்  குறும்பட புகழ் இயக்குனர் திரு.விடிவெள்ளி அவர்களின் மற்றுமொரு அற்புதமான படைப்பு இந்த குறும்படம். இந்த படத்தில் வசனங்கள், நடிப்பு யாவையும் மிகைப்படுத்தாமல்  கையாளப்பட்டிருக்கிறது.  இசை ஸ்வரன் கிஷோர்  ஆரவாரமில்லாத மனதை மயக்கும் இசை படத்திற்க்கு மிகவும் உறுதுணையாக உள்ளது.  இந்த குறும்படம் உங்களூக்கு நிச்சயம் பிடிக்கும் பார்த்து விட்டு தங்களின் மனதில் தோன்றும் உணர்வுகளை வரிகளாக தாருங்கள் அவை வளரும் கலைஞர் மாணவர்களூக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.Wednesday, February 6, 2013

375 வதனமே சந்திரபிம்மமோநாம் பிறப்பதற்க்கு முன்  வாழ்ந்தவர்கள்  திரையிசை ஜாம்பவான் ஸ்ரீ.பாபநாச சிவன் அவர்கள்.  பல பழைய பாடல்களை நாம் கேட்டிருப்போம் அப்போது நல்ல இனிய மெட்டுகளை கொண்ட பாடல்கள்  உருவாக்கியவர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமில்லாமல் கேட்டு மகிழ்வோம்.  இது போன்ற ஒலித்தொகுப்புகளில்  கேட்கும் போது தான் அடடே  இவர் போட்ட மெட்டா என்று ஆச்சரியபட்டு போவோம். அது போன்று தான் இருந்தது இந்த ஒலித்தொகுப்பை நான் கேட்கும் போது  என் உணர்வு.  அவரைப்பற்றி இனிய தகவல்களூடன் அறிவிப்பாளர் திருமதி.ஸ்ரீவிதயா வரதராஜன் அவர்கள் வழங்கினார் அவருக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றிகள்.


1.என்ன செய்தாலும்
2.அற்புத லீலைகளை
3.அண்ணையும் தந்தையும்
4.ஓ மாதா மாதா
5.நடையலங்காரம் கண்டேன்
6.கிரிதர கோபாலா
7.எங்கும் நிறைந்தாயே
8.வதனமே ச்ந்திரபிம்மமோ
9.பிறவா வரம் தாரோ
10.அம்பாள் மனம்கனிந்து உனது
11.மன்மத லீலையை வென்றோர்
12.பூமியில் மானிட ஜென்மம்
13.எனது பிம்பமே??
14.மனம் தருவேன்
15.ஒரு நாள் ஒரு பொழுதாகினும்ஒலித்தொகுப்பை இங்கே பதிவிறக்கம் செய்தும் கேட்கலாம்.

374 வெள்ளி நிலா வானத்திலேஇசையுலக ஜாம்பவான்  இசையமைப்பாளர் திரு.டி.ஆர்.பாப்பா அவர்களின்  சிறப்பு தொகுப்பு ஏற்கெனவே இந்த வலைப்பூவில் பதிந்திருந்தாலும்.  மீண்டும் இனிய பாடல்களுடன் அவருடைய அறிதான தகவல்களூடன்  நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அறிவிப்பாளர் திருமதி. ஸ்ரீவித்யா வரதராஜன் அவர்கள். இந்த வலைப்பூவில் இவரின் இனிய குரலை கேட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன  சமீபத்தில் இவரின் இந்த நிகழ்ச்சி கேட்டேன்  மனதிற்க்கும் மிகவும் அமைதியை தந்தது,. உடனே உங்கள் செவிகளுக்கும். கேட்டு விட்டு தங்கள் கருத்துகளையும் தாருங்கள் அன்பர்களே. 

1.ஆட வேண்டும் மயிலே
2.முத்தமா..முத்தமா
3.உள்ளம் தேடாது
4.ஆசை கூடும்
5.வருவேன் நான் உனது
6.குத்தால அருவியிலே
7.ஆசை பொங்குமா
8.திருமணம் ஆகாத பெண்ணே
9.வெள்ளி நிலா வானத்திலே
10.யார் சொல்லுவார் நிலவே
11.ஆண்டவன் ஒருவன்
12.இறைவன் என்றொரு கவிஞன்பதிவிற்க்கம் இங்கே

373 ராசி நல்ல ராசி

டாக்டர் பக்தவசலம் கோவையில் இவரைப் பற்றி தெரியாதவர் யாரும் இல்லை எனலாம்.  அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் சொன்னது போல் கோவையின் மத்தியில் மிக பிரமாண்டாமாக வீற்றிருக்கும் கே.ஜி. மருத்துவமணையின் நிர்வாகி. இவர்  பேட்டி அளித்த ஓர் நிகழ்ச்சி பண்பலையில் 75 ஆவது வார சிறப்பு நிகழ்ச்சியாக ஒலிபரப்பினார்கள்.  அவரின் உருவம் போலவே  அவர் பேசும் பேச்சும் குரலும்  கம்பீரமாக இருந்தன  நல்ல பல கருத்துக்களை சமூகத்திற்க்கு  ஆர்வத்துடன் தெரிவித்தார் என்ன என்பதை தாங்களூம் இந்த ஒலித்தொகுப்பில் இனிய பாடல்களூடன் கேட்டு தெரிந்து கொள்ளலாம். உடன் தங்களின் கருத்துக்களையும் தரலாம்.  இந்த நிகழ்ச்சியை வழங்கிய டாக்டர் ஜிபி அவர்களூக்கும்  அறிவிப்பாளர் திரு.ராஜ்குமார் அவர்களூக்கும் இணைய தள நேயர்கள் சார்பாக நன்றி.


1.உன்னால் முடியும் தம்பி தம்பி
2.அக்னி குஞ்சு ஒன்று கண்டேன்
3.ராசி நல்ல ராசி
4.இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
5.உன்னை அறிந்தால் நீ
6.மனைவி அமைவதெல்லாம்
7.பனிவிழும் மலர்வனம்

ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

Follow by Email