Monday, December 15, 2014

410 கவிதை பாடு குயிலே !.. குயிலே.!.!



கவிதை பாடு குயிலே !.. குயிலே.!.!. வானொலி நட்சத்திரங்களின் விருப்பப் பாடல்களூடன் குட்டி குட்டிக் கவிதைகளூடன் ராகினி குயிலே..!.. கவிதை பாடு குயிலே.!..!.

1. ”ஆயிரம் தாமரை மொட்டுக்களே” என்று ஈரோடு ஆனந்தம் பாளையம் ரகுபதி அவர்களை
ஆனந்தப்படுத்திய ரம்மியமான மெட்டுப் பாடல்.

2. ஈரோடு ஜெயராமன் அவர்களின் மனதை ஜெயித்த பாடல் ”ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்”.

3. ஈரோடு சூலம்பட்டி வலசு அவர்கள் ”அந்த நிலாவை கையில்” பிடித்த கவிதையின் அழகு.

4. ”இசை மேடையில் இந்த வேளையில்” என்று தன் பாடும் கனவை வான்வெளி மேடையில் கோவை ஹி.ஹி..(நான் தாங்க) நனவாக்கிய கவிதை குயிலின் மென்மையின் குரல் என்னை குதுகலித்தது.

5. ஈரோடு சிவக்குமார் அவர்களின் சிருங்கார பாடல் “தேவன் கோயில் தீபம் ஒன்று” அவர் மனதை மயக்கிய பாடல்.

6. பவானி கங்கேஸ்வரனின் மனதை காந்தமாக கவர்ந்த பாடல் “இதழோடு இதழ் சேரும் நேரம்” அவர் பேரையே மறந்த நேரம்.

7.”காலங்காத்தாலே ஒரு வேலையில்லாமே” இனிய இசை கேட்டு ரசிக்க கோபி ஜெகதீஸ்வரன் கிளம்பிவிட்டார்.

8.கோபி ஜி.எஸ்.ரமேஷ் அவர்கள் ”கஸ்தூரி மானே கல்யாண தேனே” என்று கச்சேரி பாட துவங்கிவிட்டார் பரவசத்துடன்.

9. ”காதல் ஓவீயம் பாடும் காவியம்” என்று கோவில் கோபுர மணியை ஒலிக்க விரும்பயவர் வெள்ளக்கோவில் ராஜ் அவர்கள்.

10. ஈரோடு சரவணன் அவர்களின் மனதை சஞ்சலப்படுத்திய சங்கீதப் பாடல் ”நீ ஒரு காதல் சங்கீதம்”

குறிப்பு: வானொலி நேயர்கள் உங்கள்  உணர்வுகளை  கீழே உள்ள மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது பேஸ்புக் முகவரி மூலமாக அறிவிப்பாளினி திருமதி ராகின் பாஸ்கரன் அவர்களுக்கு தெரிவிக்கலாம்.

kavithaikuyil@gmail.com



தொகுப்பு - 1



தொகுப்பு - 2



தொகுப்பு - 3




2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்றும் ரசிக்க வைக்கும் தொகுப்பு...

Covai Ravee R said...

மிக்க நன்றி தனபால் சார்.

Follow by Email